ஜனாதிபதி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதை இத்தேர்தல் உணர்த்துகிறது ! ஹிஸ்புல்லாஹ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 31, 2014

ஜனாதிபதி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதை இத்தேர்தல் உணர்த்துகிறது ! ஹிஸ்புல்லாஹ்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது இந்த நாட்டு மக்கள் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதையும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் முழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையும் உணர்த்துகின்றது.


இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாணத் தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்; தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இச் சூழ்நிலையில் நாம் அரசுடனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் இருக்கின்றோமென்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்கு இத்தேர்தல் மூலம் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களின் தலைநகரங்களில் ஜக்கிய தேசிய  கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த பெருமளவு மக்கள் இத்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளனர். நாம் இந்த ஆதரவுக்கு பாராட்டுவதுடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இத்தேர்தலூடாக மக்கள் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச சமூகத்திற்கும் இலங்கைக்கெதிராக செயல்படும் அமெரிக்காää அதன் நேச நாடுகளுக்கும்ää தோற்கடிக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈää புலம்பெயர்ந்தோருக்கும் சிறந்;த பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

மிக நேர்மையாக நடைபெற்ற இத்தேர்தலில்; அரசின் ஆதரவை குறைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக்கொண்ட போதிலும் அரசுக்கு பெருமளவு ஆதரவினை மக்கள் வழங்கியுள்ளனர். பல தேர்தல்களில் வெற்றி கொண்ட அரசு மக்கள் எதுவித அச்சமுமின்றி வாக்களிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இத்தேர்தல்களில் அமோக ஆதரவினை வழங்கிய இந்நாட்டு மக்களின் பொருளாதாரம் வளரவும் வறுமையை ஒழிக்கவும் தொடர்ச்சியாக முன்னின்று பாடுபடுமென்றும் இந்த அமோக ஆதரவினை வழங்கிய மக்களுக்கு பிதரி அமைச்சர் நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும் என்று தெரிவித்தார். 

No comments:

Post Top Ad