’சம சவுக்கிய சுவ சஹன யாத்ரா’’ வைத்திய முகாம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 03, 2014

’சம சவுக்கிய சுவ சஹன யாத்ரா’’ வைத்திய முகாம்


(முஹம்மட் லுத்பி)

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் உருஹூணு பல்கலைக்கழகம் என்பனவற்றின்  இணைந்த சுகாதரா விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்;டில் ‘’சம சவுக்கிய சுவ சஹன யாத்ரா’’ எனும் வைத்திய முகாமொன்று எதிர்வரும் 08.03.2014 சனிக்கிழமை அன்று மாத்தறை உதுருகனுமுல்ல நவோதய மகா வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இவ்வைத்திய முகாமில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள்இ இயன்மருத்துவ சிகிச்சைகள்இ முதலுதவி அறிவுருத்தல்கள்இ உளவள ஆலோசனைகள் மற்றும் சுகாதார வாழ்கை முறைக்கான ஆலோசனைகள் என்பன வழங்கப்பட உள்ளன. இதே போன்றதொரு நிகழ்வு கடந்த மாதம் 15.02.2014 அன்று கேகாலை மாவட்டத்தில்  ரன்வல விகாரையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் போது பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments:

Post Top Ad