அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு அஸ்வர் நன்றி தெரிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 29, 2014

அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு அஸ்வர் நன்றி தெரிவிப்பு


அரசாங்க தகவல் திணைக்களம் தேர்தல் பெறுபேறுகளை துரித கதியில் மிகவும் நேர்த்தியாக ஊடகங்களுக்கு வழங்குவதற்கு கடந்த காலங்களைப்போல இம்முறையும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இது தொடர்பாக அயராது பாடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் தகவல்துறை ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்பி அல்ஹாஜ். ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.
தேர்தல் பெறுபேறுகளை துரித கதியில்  மக்களுக்கு வழங்குவதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இயங்கும் இலத்திரன் ஊடக செய்திக்கூடங்களின் செயற்பாடுகளை பார்வையிட வந்த சமயமே இங்கு நடைபெறும் ஊடக நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இங்கு மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்கள் குறித்து தாம் உண்மையாகவே பெருமையடைவதாக கூறிய ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்பி அஸ்வர்,இந்தியாவில் தேர்தல் நடைபெற்று சுமார் ஒரு மாத காலத்துக்கு பின்னரே அந்நாட்டு மக்கள் தேர்தல் பெறுபேறுகளை அறிந்துக்கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் அவ்வாறன்றி இலங்கை மக்கள் தேர்தல் நடைபெற்ற மறுதினமே முழுமையான பெறுபேறுகளை அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லயின் வழிகாட்டலின் கீழ், திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலயின் மேற்பார்வையில் இங்கு கடமை புரியும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு அவ்வப்போது சிற்றுண்டிகளையும் வழங்கி அவர்களை கண்காணிக்கும் பாணியே அலாதி தான். 

அது மாத்திரமன்றி, தேர்தல் ஆணையாளரிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் தேர்தல் பெறுபேறுகள் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலயின் கையொப்பத்துடன் எல்லா ஊடகங்களுக்கும் வினியோகிக்கப்படுவதாகவும், இந்த பெறுபேறுகள்  இரண்டே இரண்டு வினாடிகளில் இலங்கையை மட்டுமல்ல, முழு உலக நாடுகளையும் சென்றடையும் அளவுக்கு இன்று நம்நாட்டில் தொழில் நுட்பமும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது எமது திணைக்களத்தின் அரசாங்க உத்தியோகபூர்வ இணையத்தளமே இச்செய்திகளை முழு உலகிற்கும் எடுத்துச் செல்கின்றது என்றும் அஸ்வர் எம்பி மேலும் தெரிவித்தார். 

No comments:

Post Top Ad