முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த அரசியலும் இல்லை ! பைசர் முஸ்தபா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 22, 2014

முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த அரசியலும் இல்லை ! பைசர் முஸ்தபா


முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த அரசியலும் இல்லை என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறினார்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது எனவும் பிரதியமைச்சர் முஸ்தபா குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் தெரிவித்திருந்தது.
கூட்டமைப்புடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் தமது கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லம் மொஹமட் சலீம் கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவையை நிறைவேற்ற இவ்வாறு செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் நோக்கங்களை புறந்தள்ளி விட்டு, வடக்கு, கிழக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தயார் என்றால், அவர்களுடன் இணைந்து செயற்பட தாமும் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad