ஜனாதிபதியின் முன் கேள்வி கேட்பதற்கு ஹக்கீம் ஏன் தொடை நடுங்குகிறார் ? முபாறக் மௌலவி கேள்வி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 27, 2014

ஜனாதிபதியின் முன் கேள்வி கேட்பதற்கு ஹக்கீம் ஏன் தொடை நடுங்குகிறார் ? முபாறக் மௌலவி கேள்வி


பொது பல சேனாவுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கியது யார் என பொது மக்கள் முன் கேள்வி எழுப்பும் ஹக்கீம் ஏன் இந்தக்கேள்வியை தனது அமைச்சரவை தலைவரான ஜனாதிபதியிடம் கேட்பதற்கு தொடை நடுங்குகிறார் என 
உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினார்.


கொழும்பு கிறேன்ட்பாஸ் மெல்வத்தை லேனில் நடை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்,

தங்களை அரசாங்கத்திலிருந்து நீக்கினால் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாறும் என ஹக்கீம் கொழும்பில் கூறுகிறார். ஆனால் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சரோ தாங்கள் ஒரு போதும் அரசிலிருந்து விலகப்போவதில்லை என அங்கிருந்து கூறுகிறார். இதன் மூலம் இந்தக்கட்சியினர் முஸ்லிம் மக்களை தமது சுயநலன்களுக்காக பகடைக்காய்களாக பயன் படுத்தி ஏமாற்றுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளலலாம். இவர்கள் அரசிலிருந்து விலகமாட்டார்கள் ன்பதே உண்மையாகும்.

இந்த அரசாங்கத்தின் அனைத்து விதமான முஸ்லிம் எதிர்ப்புகளுக்கும் முஸ்லிம் காங்கிரசும் பங்கு என்பதை புத்தியுள்ள எவனும் மறுக்க மாட்டான். அனைத்தும் நடக்கும் போது ஜனாதிபதியுடன் உட்கார்ந்து புரியாணி சாப்பிட்ட ஹக்கீம் தேர்தல் வந்ததும் பொது மக்கள் முன்பு வந்து கைகளை உயர்த்தி வீறாப்பு பேசுகிறார். அடேயப்பா பொதுபல சேனாவுக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தது நீங்களும் பங்காளியாக உள்ள உங்கள் அரசாங்கம்தானே என்று ஹக்கீமைப்பார்த்து சொல்கின்றோம். நீங்களும் சேர்ந்து அந்த அதிகாரத்தை கொடுத்து விட்டு சமூகத்திடம் வந்து ஏன் இப்படி நடிக்கிறீர்கள். ஏன் அப்பாவி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.?

நீங்கள் இந்த சமூகத்தை எம் கண் முன்பே ஏமாற்றும் போது அதனை பார்த்துக்கொண்டு பேசா மடந்தையாக இருப்பதுதான்  மௌலவிமாரின் பண்பாகுமா? அதனால்த்தான் நாமும் களத்தில் இறங்கி சமூகத்துக்கு அரசியல் விழிப்பூட்டுகிறோம்.

முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று வித்iதைகளை பார்த்து அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியினரும் கொழும்பு முஸ்லிம்களை ஏமாற்ற வந்துள்ளனர். இந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றி விட்டதாக அவரும் கூறுகிறார். உங்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியது என்றால் ஏன் அரசின் கையை பலப்படுத்தி முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்க தனியாக போட்டியிடுகின்றீர்கள்? உண்மையில் இந்த அரசாங்கத்தின் மீது உங்களுக்கு அவநம்பிக்கை இருந்தால் உடனடியாக தேர்தலில் இருந்து வாபஸ் பெற்று ஐ தே கட்சிக்கு வாக்களிக்கும்படி கோருவதுதானே தர்மமாகும்? மக்களை ஏமாற்றுவதையே மூலாதாரமாகக்கொண்ட இந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் தர்மத்தை எதிர் பார்க்க முடியாது.

ஆகவே கொழும்பு முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தையும் அதன் புறோக்கர்களான ஹக்கீமையும், ரிசாதையும் நிராகரிக்கிறார்கள் என்ற செய்தியை இ;ந்த தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் சொல்ல வேண்டுமாயின் ஐ தே கவுக்கும் முஜிபுர்ரஹ்மானுக்கும் வாக்களிக்க வேண்டும். அப்படி செய்யாமல் வெற்றிலைக்கோ மரத்துக்கோ மயிலுக்கோ வாக்களித்தால் இதோ முஸ்லிம்கள் எமக்கும் எமது பங்காளி கட்சிகளுக்குமே வாக்களித்துள்ளார்கள். அதனால் பள்ளிவாயல் உபை;பு, அபாயா இழுப்பு, ஹலால் ஒழிப்பு என்பதெல்லாம் பொய் என அரசாங்கம் சொல்வதற்கு நாங்களே வழி வகுத்தவர்களாவோம்.


No comments:

Post Top Ad