நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், மலேசிய ராணி ஜாலியாக கோல்ப் விளையாடுகிறார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 27, 2014

நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், மலேசிய ராணி ஜாலியாக கோல்ப் விளையாடுகிறார்


மாயமான விமானம் பற்றி நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், மலேசிய ராணி ஜாலியாக கோல்ப் விளையாடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமாகி போனது.
அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.
விமான என்ன ஆனது என்பது குறித்து தெரியாத நிலையில் பயணிகளின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்நிலையில் மலேசிய ராணி ராஜா அகோங் தவுன்கு ஹாஜாக் ஹமினாக் (Raja Agong Tuanku Hajah Haminah) கிலன்மேரி கோல்ப் மற்றும் கண்ட்ரி கிளப் கோலாலம்பூரில் நடத்திய . ஈரீ ஆசிய கோப்பை கோல்ப் போட்டியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாக உள்ளூர் பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டிய ராணி, இவ்வாறு பொறுப்பில்லாமல் ஜாலியாக விளையாடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post Top Ad