மூதூர் முன்பள்ளி நிர்வாகிகள் மற்றும் விளையாட்டுக்கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

மூதூர் முன்பள்ளி நிர்வாகிகள் மற்றும் விளையாட்டுக்கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் மூதூர் பீஸ் ஹோம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்பள்ளி நிர்வாகிகள் மற்றும் விளையாட்டுக்கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நேற்று மூதூரில் இடம்பெற்றது.


மூதூர் பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.அமீர் தலைமையில்   கிண்ணியா உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எம்.ஹிதாயத்துல்லா நளிமிää உஸ்தாத்  ஏ.எம்.அப்துல்கனி ஹாமி (ஏறாவூர்)ää மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் ஏ.எம்.மஹ்ரூப் நத்விääஇலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் தஃவா பிரிவுப் பொறுப்பாளர்களான அஷ்ஷேய்க் ஜே.எம்.றியாஜ் நத்விää அஷ்ஷேய்க்  ஐ.எம்.றமீஸ் நத்விää அஷ்ஷேய்க் எம்.எஸ்.ஷாபி நூறாணி ஆகியோரின் பங்குபற்றலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது முன்பள்ளி நிர்வாகிகள் முன்பள்ளிகளில் சன்மார்க்கத்திற்கு இசைந்து போகக்கூடிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுதவும் ‘ஒளரத்’ முறையிலான சீருடைகளை ஒழுங்குபடுத்தவும் இணங்கிக் கொண்டனர்.
இதேவேளைää விளையாட்டுக்கழக நிர்வாகிகள் விளையாட்டின்போது ‘ஒளரத்’ முறையிலான சீருடைகளை அமுல்படுத்தவும் விளையாட்டின் போதும் தொழுகைகுரிய நேரத்தில் விளையாட்டை நிறுத்தி தொழுகையை நிறைவேற்றுவதெனவும் அத்தோடு சன்மார்க்கத்திற்கு ஒத்திசைவாக விளையாட்டில் ஈடுபடுவதெனவும் தீர்மானம்   நிறைவேற்றப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி நிர்வாகிகள் மற்றும் விளையாட்டுக்கழக நிர்வாகிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad