முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக “கோள்” சொல்கிறது ! அஸ்வர் எம்.பி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 03, 2014

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக “கோள்” சொல்கிறது ! அஸ்வர் எம்.பி


முஸ்லிம்கள் சகல சமூகத்தினருடனும் தொடர்ந்தும் நட்புறவுடன் வாழ்ந்து வந்ததை நாம் மறந்துவிடலாகாது. முஸ்லிம்கள் என்றுமே வன்முறையில் ஈடுபடவில்லை. பிரிவினை, தனிநாடு என்ற எண்ணத்திற்கு அவர்கள் என்றுமே மனதில் இடமிருக்கவில்லை. இவ்விதம் என்றும் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்காகவும், ஒற்றுமைக்காவும் வலுவாக செயற்பட்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து நாம் வேதனைப்படுகிறோம். அரசாங்கம் வழங்கும் சகல சலுகைகளையும் முழுமையாக அனுபவித்து வரும் இவர்கள் ஜெனீவாவுக்கும் ஏனைய வெளிநாட்டு ஏகாதிபத்திய வாதிகளுக்கும் “கோள்” சொல்லி தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு காலடி வைத்த தங்கள் மூதாதையரின் வழியில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கையின் ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்காக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். போர்த்துக் கேயருக்கு எதிரான பயங்கர யுத்தத்தின் போது முஸ்லிம்கள் மாயாதுன்னை மன்னனை ஆதரித்து போர்த்துக் கேயரை சீதாவக்க இராஜதானியில் இருந்து விரட்டியடித்த சம்பவம் முஸ்லிம்களின் தேசப்பற்றை எடுத்துக்காட்டுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவையின் உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad