ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இலகுவாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 04, 2014

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இலகுவாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது


ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 129 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்தது
முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குமார் சங்கக்கார 76 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மிர்வைஸ் அஷ்ரப் 2 விக்கட்டுக்களை  கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி இலக்கான 254 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
நஜ்புல்லா சட்ரான் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக குமார் சங்கக்கார தெரிவானார்.

No comments:

Post Top Ad