அபுதாபியில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடிசெய்த முகவர் நிலையம் சுற்றிவளைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 15, 2014

அபுதாபியில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடிசெய்த முகவர் நிலையம் சுற்றிவளைப்பு

(nf)

அபுதாபியில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோடிக்கணக்கான பணத்தை மோசடிசெய்த மருதானை பகுதியிலுள்ள தொழில்வாய்ப்பு முகவர் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், முகவர் நிலையத்தின் உரிமையாளர் தப்பிச்சென்றுள்ளார்.

சுமார் 183 பேரிடம் இவ்வாறு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகவர் நிலையத்திலிருந்த 223 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post Top Ad