யுவனின் மதம் மாற்றம் குறித்த கேள்விகளுக்கு முன்கூட்டியே ஊடக சந்திப்பில் அவதானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

யுவனின் மதம் மாற்றம் குறித்த கேள்விகளுக்கு முன்கூட்டியே ஊடக சந்திப்பில் அவதானம்

(nf)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் மகேந்திரன் இயக்கவருக்கும் திரைப்படம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று சென்னையில் நடைபெற்றது.

எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் மகேந்திரன் திரைப்படம் ஒன்றை இயக்குகின்றார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து இயக்குனர் மகேந்திரன் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று  சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இதன் போது சில வாரங்களுக்கு முன்னர் மதம் மாறிய யுவன் ஷங்கர் ராஜா பற்றி பத்திரிகையாளர்கள் அவரின் தந்தை இளையராஜாவிடம் ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்று ஊடகசந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் அவதானமாக இருந்துள்ளனர்.
இது குறித்து முன்னதாகவே ஊடகவியலாளர்களை அழைத்து யுவன் ஷங்கர்  ராஜாவின் மதமாற்றம் குறித்து எதுவும் கேட்க வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளையராஜா – மகேந்திரன் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad