விசேட தேவையுடையோருக்கான கூட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

விசேட தேவையுடையோருக்கான கூட்டம் (படங்கள் இணைப்பு)


(ஏ.சீ.ஹாலீத்)

புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள விசேட தேவையுடையோர்களின் தேவைகளை வகைப்படுத்தி பொருத்தமான சேவைகளையும்ääஉபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமிடல் கூட்டமொன்று 2014-02-27(வியாழக்கிழமை) அண்று புல்மோட்டை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.


குச்சவெளிப் பிரதேச செயலக சமூகசேவைப் பிரிவின் பொறுப்பாளர் நௌபர் அவர்களின் ஆலோசனைக்கமைய கிராம சேவையாளர் தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற மேற்படிக் கூட்டத்தில் புல்மோட்டை மூண்றாம் வட்டார கிராம முதியோர் சங்கத்தின் செயலாளர் ஓய்வுபெற்ற பிரதிஅதிபர் எஸ்.எல்.முஹைதீன் பாவா மற்றும் புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டனர்.

கடுமையான நோய்வாய்ப்பட்டு படக்கையில் இருப்போருக்கான மெத்தைகள்ää நடக்கமுடியாதோருக்கான சில்லுக்கதிரைகள்ää மூக்குக்கண்ணாடிகள்ää காதுகேளாதோருக்கான கருவிகள்ää வலது குறைந்தோருக்கான உபகரணங்கள் போன்றவற்றையும் சில்லுக்கதிரைகளை வீட்டிற்குள் கொண்டுசெல்வதற்கான வாசல்படியமைக்க ரூபா 15000 பணத்தொகையினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் வலுவிளந்தோருக்கான இலவசமருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தன்னால் சிபார்சுசெய்யக்கூடியதாக இருக்கும் என்று கிராம சேவையாளர் தாஜுதீன் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கம் ஒண்று புல்மோட்டையில் அமைக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் மேற்படிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post Top Ad