2014 ஆசிய கிண்ணம் இலங்கை அணி வசமானது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 09, 2014

2014 ஆசிய கிண்ணம் இலங்கை அணி வசமானது


2014ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி தன்வசப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 


பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

ஆரம்ப துடிப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற தடுமாற்றத்தை எதிர்நோக்கிய பாகிஸ்தான் அணியை, மிஸ்பா உல்ஹக் மற்றும் பவட் அலாம் ஜோடி வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். 

பின்னர் மிஸ்பா உல்ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய உமர் அக்மல் 42 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 59 ஓட்டங்களை விளாசினார். 

50 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி 260 ஓட்டங்களைக் குவித்தது. 

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். 

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பில் திரிமன்னே 101 ஓட்டங்களையும் ஜெயவர்தன 74 ஓட்டங்களையும் பெரெரா 42 ஓட்டங்களையும் பெற்றனர். 

நேற்றைய போட்டியில் திரிமன்னே தனது மூன்றாவது ஒருநாள் சர்வதேச சதத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அஜ்மல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

2014 ஆசிய கிண்ண தொடர் நாயகனாக திரிமான்னே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய போட்டியின் நாயகனாக லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டார். 

No comments:

Post Top Ad