தி/மூ/சதாம் வித்தியாலயத்தின் 2013 ல் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பரிசளித்து கௌரவிக்கும் விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 09, 2014

தி/மூ/சதாம் வித்தியாலயத்தின் 2013 ல் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பரிசளித்து கௌரவிக்கும் விழா (படங்கள் இணைப்பு)


மூதூரில் நடுத்தீவில் அமைந்துள்ள தி/மூ/சதாம் வித்தியாலயத்தின் கடந்த 2013 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி வெற்றி பெற்ற மாணவர்களையும் , பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பரிசளித்து கௌரவிக்கும் விழா நேற்று (2014-03-09 ) சனிக்கிழமை சதாம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.நஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கும்,கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இவ்விழாவின் பிரதம விருந்தினராக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஏ.விஜயானந்தமூர்த்தி அவர்களும் , கௌரவ விருந்தினர்களாக ஜனாப்.வீம்.எம்.லாபீர் (உதவிக்கல்விப் பணிப்பாளர்.மூதூர் வலயக் கல்வி பணியகம்) , ஜனாப்.எம்.எஸ்.றமீம் (உதவிக்கல்விப் பணிப்பாளர்.ஆங்கிலப் பிரிவு) மற்றும் விசேட விருந்தினர்களாக ஜனாப்.வீ.எம்.நகீப் (அதிபர்.தி/மூ/ஹக்கீம் வித்தியாலயம்) , ஜனாப்.எஸ்.எம்.முகீர் (அதிபர்.தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி) , திரு.வீ.சுப்ரமனியம் , ஜனாப்.ஜே.எம்.பிச்சை , ஜனாப்.ஏ.எல்.ஜவாஹிர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்களின் பெற்றார்கள்,ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேறியமை சிறப்பம்சமாகும்.

2013ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தி/மூ/சதாம் வித்தியாலய மாணவர்களின் விபரம்

முஹம்மது உவைஸ் ஹூஸ்னி அஹமட் - 175 புள்ளிகள்
முஹம்மது அக்பர் பாத்திமா அப்fலா - 169 புள்ளிகள்
றஸீக் அம்றின் மனாத் - 165 புள்ளிகள்
மஹதிக் றீஸ்மா மரியம் - 157 புள்ளிகள்
இக்பால் முஹம்மது அஸ்காம் - 156 புள்ளிகள்
நியாஸ் முஹம்மது நிஜாஸ் - 153 புள்ளிகள்

2013ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற தி/மூ/சதாம் வித்தியாலய மாணவர்களின் விபரம்

முஹம்மது றிஸ்வி சம்ஹிர் அஹமட் - 144
றியாஸ் முஹம்மது ஹஸன் - 144
முஹம்மது நிஸாம் பாத்திமா நுஸ்கா - 142
றியாஸ் பாத்திமா புஸ்ரா - 140
அஜ்மீர் முஹம்மது அஸ்ரான் - 129
தஸ்லீம் முஹம்மது ஹம்தான் - 129
சதாத் சம்ஹா - 125
இர்சாத் பாத்திமா நிப்கா - 124
இமாமுதீன் அமஹர் - 117
சமீம் முஹம்மது சாஜித் - 106
முஹம்மது றிஸ்மி சம்ரான் ஹஸன் - 95
வஹீத் முஹம்மது அஸ்னிப் - 75

ஒலித் தொகுப்பு மற்றும் புகைப்படங்கள்
DEEN STUDIO & AUDIO SYSTEM 
மூதூர்
No comments:

Post Top Ad