வெடிகுண்டு பீதியால் இந்திய விமானம் மலேசியாவில் அவசரமாக தரையிறங்கியது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, February 14, 2014

வெடிகுண்டு பீதியால் இந்திய விமானம் மலேசியாவில் அவசரமாக தரையிறங்கியது


இந்தியாவை சேர்ந்த இண்டிகோ என்ற தனியார் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று வெடிகுண்டு பீதியால் கோலாலம்பூரில் அவரசமாக தறையிறங்கியது.


விமானத்தில் உள்ள கழிப்பறை அருகே சந்தேகத்திடமான வகையில் பார்சல் ஒன்று கிடந்ததை பார்த்த விமான பணிப்பெண்கள் இது குறித்து புகார் தெரிவித்ததையடுத்தே அவசரமாக அது தரையிரங்கியது. ஆனால் பின்னர் அந்த பார்சலில் மூன்று தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் வெடிகுண்டு பீதி நீங்கியது. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 145 பயணிகளுடன் அந்த விமானம் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

விமானம் அவசரமாக தரையிறங்கிய உடன் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் அந்த பார்சலை கைப்பற்றி சோதனை செய்ததிலேயே அதில் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பார்சலை யார் கொண்டுவந்தார்கள், யார் அதை கழிப்பிடத்திற்கு அருகே வைத்தார்கள் என எந்த விவரமும் தெரியவில்லை. இது குறித்து விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரித்து வருவதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரி முஹமது சனி ஹருல் தெரிவித்தார்.

பின்னர் அந்த விமானம் சென்னையை நோக்கி தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.

No comments:

Post Top Ad