வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, February 12, 2014

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் கடந்த இருமாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில்,
“காகித ஆலை நிர்வாகமே 75 இற்கு மேற்பட்ட இரும்பு லொறிகள் விற்ற பணம் எங்கே?”, “இரண்டு மாதச் சம்பளப் பணத்தை தராமல் ஏமாற்றும் முகாமையே வெளியேறு”, “ஏழை ஊழியர்களின் இரத்தம் உறுஞ்சும் தலைமை அதிகாரியே உன்னை வெளியேற்றுவோம்”,
“தொழிலாளர்களுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகாமையே இது உனக்குத் தேவையா?“, “எமது பிள்ளைகளின் பசி, பட்டினியோடு, தவிசாளர் சுகபோக வாழ்க்கை” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி சம்பவத்தை கேள்வியுற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவ்விடத்திற்கு சென்று ஊழியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவரிடம் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
தங்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த சம்பளக் கொடுப்பனவானது, கடந்த 2 மாதங்களாக இது வரை வழங்கப்படவில்லையென்றும் தங்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கப் பெற வேண்டுமெனவும் அம்மகஜரில் குறிப்பிட்டுள்ளனர்.No comments:

Post Top Ad