உலக சாதனை படைக்கும் இங்கிலாந்து குடும்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, February 12, 2014

உலக சாதனை படைக்கும் இங்கிலாந்து குடும்பம்


இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 சகோதரர்களின் வயதுக் கூட்டுத்தொகை 855 வருடங்கள். இந்த குடும்பம் உலகத்தின் மூத்த குடும்பம் என கின்னஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மிடில்ஸ்பிரக் நகரில் வசித்து வரும் 68 முதல் 89 வயதுள்ள புருட்நெல் சகோதரர்கள் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள்.
ராபர்ட் (68), ஜான் (69), ஜீன் (71), மேரியன் (74), ஜேம்ஸ் (76), வின்சென்ட் (78), மே (79), மேரி (80), வின்பிரெட் (83), வில்லியம் (88) மற்றும் பெர்னாடெட்டி (89) ஆகிய இந்த சகோதர-சகோதரிகள் சிறு வயதில் இருந்ததைப் போலவே இப்போதும் இணைந்திருக்கிறார்கள்.
இதுபோன்று அதிக வயதுள்ள சகோதரர்கள் கொண்ட எந்த ஒரு குடும்பம் பற்றிய தகவலும் இதுவரை வரவில்லை என்று கின்னஸ் உலக சாதனை கமிட்டி அறிவித்துள்ளது.
இதற்கு முந்தைய சாதனையாக, 9 சகோதரர்களின் வயது கூட்டுத்தொகை 828 ஆண்டுகளாக இருந்தது. எனவே, இந்த சாதனையை முறியடிக்க தகுதி பெற்றுள்ள புருட்நெல் குடும்பம், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்கலாம் என்று கின்னஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

No comments:

Post Top Ad