ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதில்லை ! அசாத் சாலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, February 12, 2014

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதில்லை ! அசாத் சாலி

(ad)

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


எனவே தொடர்ச்சியாக தோல்வியடைந்து வரும் கட்சிக்கு ஆதரவளிப்பதில் பயனில்லை என்பதால் ஐதேகவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்காதிருக்க முடிவு செய்துள்ளதாக அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்திருந்த அசாத் சாலி அதிலிருந்து விலகி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுல் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

பின்னர் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு என்ற அமைப்பில் இணைந்து செயற்பட்ட அசாத் சாலி, கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

தற்போது அவர் மத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post Top Ad