தேசப்பற்றாளர் என மார்தட்டிக்கொள்ளும் ஆட்சியாளர் பயங்கரவாதிகளையே பாதுகாக்கின்றனர் ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, February 01, 2014

தேசப்பற்றாளர் என மார்தட்டிக்கொள்ளும் ஆட்சியாளர் பயங்கரவாதிகளையே பாதுகாக்கின்றனர் !


தேசப்பற்றாளர் என மார்தட்டிக்கொள்ளும் ஆட்சியாளர் பயங்கரவாதிகளையே பாதுகாக்கின்றனர். தேசப்பற்று குறித்து பேசும் ஆட்சியாளரின் மடியில் இருப்பவர்கள் அநேகர் பயங்கரவாதிகளேயாகும். இவ்வாறு ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிரான்ட்பாஸில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,
என்னை புதிய பிரபாகரன் என்று கூறுகின்றார்கள்.
நுகோகொடை பிரதேசத்தில் பத்திரிகை அச்சிடுகின்றேனாம். பிரபாகரன் மீள பிறக்கின்றார் என பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
நாட்டில் அபிவிருத்தி ஏற்படவில்லை.
இதேவேளை, நுகோகொடை பிரதேசத்தில் சரத் பொன்சேகாவிற்கு சேறு பூசும் வகையில் புத்தகமொன்று அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நூல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad