அமெரிக்காவின் விசேட பிரதிநிதிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 09, 2014

அமெரிக்காவின் விசேட பிரதிநிதிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கொழும்பு - கொள்ளுப்பிட்டி காலிவீதியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால், காலி வீதியின் இரண்டு வழித் தடங்களும் மூடப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.


No comments:

Post Top Ad