வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்தித் திணக்களம் ஆரம்பிக்கப்பட்டமையை வாழ்த்தி மத ஆராதணை நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்தித் திணக்களம் ஆரம்பிக்கப்பட்டமையை வாழ்த்தி மத ஆராதணை நிகழ்வு


வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்தித் திணக்களம் ஆரம்பிக்கப்பட்டமையை வாழ்த்தி அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் பொருளதார அமைச்சர் கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் மற்றும் பொருளதார பிரதி அமைச்சர் கௌரவ சுசந்த புஞ்சி நிலம அவர்களுக்கும் ஆசி வேண்டி பாலத்தோப்பூர் சமுர்த்தி வங்கிச் சங்கக் கட்டடத்தில் கடந்த 2014.01.03ம் திகதி காலை 09.30 மணிக்கு மத ஆராதணை நிகழ்வு சமுர்த்தி முகாமையாளர் தலைமையில் இடம் பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மூதூர் தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூதூர் தொகுதி தலைவரும்; சமூக சேவை அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜெயினுதீன் அமீர் அவர்கள் பொருளதார பிரதி அமைச்சர் கௌரவ சுசந்த புஞ்சி நிலம அவர்களின் ஆலேனைகளின் பிரகாரம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு மௌலவி ஆசிப்; அவர்களும் பட்டாளிபுர குருக்கள் யுதர்சன அவர்களும் கலந்து அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும்ää  கௌரவ பொருளதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் மற்றும் பொருளதார பிரதி அமைச்சர் கௌரவ சுசந்த புஞ்சி நிலம அவர்களுக்கும் ஆசி வேண்டி துவா பிரார்த்தனை கிகழ்வினை நடாத்தினார்கள்.

அத்துடன் இந்கிகழ்வில் பாலத்தோப்புர் சமுர்த்தி வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்களும் வலய மற்றும் வங்கி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் திவிநெகும பயனாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.


No comments:

Post Top Ad