ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை நிறுத்திக்கொண்டது ஜம்இய்யத்துல் உலமா சபை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை நிறுத்திக்கொண்டது ஜம்இய்யத்துல் உலமா சபை

(tm)

ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி முதல் நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.


இவ்வருட ஆரம்பம் முதல் இலங்கையில் புகழ்பெற்ற, துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள வரையறுக்கப்பட்ட நிறுவனமொன்று ஹலால் சான்றிதழ் வழங்குவதையும் தயாரிப்பு செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அதன் அனைத்து விடயங்களையும் வழிநடத்தவுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தேசிய பொருளாதார அபிவிருத்தியையும் சமூக ஒழுங்கையும் பேணிப் பாதுகாப்பதற்காகவே பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நல்ல முடிவாகவே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. பலதரப்பட்ட பங்குதாரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த பின்னரே உத்தரவாதமுள்ள வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடைய வடிவமைப்பில் சுதந்திரமான நிறுவனமொன்றை அமைப்பது இன்றியமையாததாக கருதப்பட்டுள்ளது.  

நாட்டிலுள்ள ஏனைய தரச் சான்றிதழ் வழங்கப்படுவது போல் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் ஆகிய இரு சாராருடைய வேண்டுகோளுக்கிணங்க செல்லுபடியாகும் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.
 
ஏற்கனவே ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்ட மற்றும் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் நிறுவனங்களுடைய அனைத்து விடயங்களையும் புதிதாக பொறுப்பேற்கவுள்ள நிறுவனம் கவனிக்கும். 

மேலும் எதிர்காலத்தில் ஹலால் சான்றிதழ் வழங்குவது மற்றும் தயாரிப்பு செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு  தொடர்பான விடயங்களில் சமூக நலனையும் பொறுப்பையும் கருதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடைய ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் இருக்கும்". 

No comments:

Post Top Ad