நவீன விவசாய முறையில் உள்நாட்டு வெளிநாட்டு மரக்கறி வகைள் உற்பத்தி-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 09, 2014

நவீன விவசாய முறையில் உள்நாட்டு வெளிநாட்டு மரக்கறி வகைள் உற்பத்தி-(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் கா-குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு முன்பாகவுள்ள வீட்டுக்  காணியில் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினதும் 'திவிநெகும' திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் முதற் தடவையாக நவீன விவசாய முறையில் இயற்கை பசளைகளை பயன்படுத்தி இஞ்சிää நேத்திரா இன வாழைகள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு  மரக்கறி வகைள் ääபழ வகைகள் என்பன கடந்த ஒரு வார காலமாக  உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.


நவீன விவசாய முறையில் இயற்கை பசளைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதிய பொறிமுறையை பார்வையிட காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ääகிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.பஷீர் ääகாத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எச்.எம்.நூர்தீன்ääஅதன் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) உட்பட ஊர் பிரமுகர்கள் நேற்று புதன்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

வெளிநாடுகளில் குறுகிய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதுபோன்றுää இங்கும் இவ்வாறான உற்பத்தியை  மேற்கொள்வதாகவும்; இது தொடர்பான பயிற்ச்சிகளை தான் பிரித்தானியாவின் தலை நகர் லண்டனில் முடித்துள்ளதாகவும் இத் திட்ட உரிமையாளர் எம்.பி.எம்.சப்ரி  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.No comments:

Post Top Ad