காத்தான்குடியில் ஹனா லிட்டில் லேர்ணர்ஸ் புதிய பாலர் பாடசாலை உதயம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, January 04, 2014

காத்தான்குடியில் ஹனா லிட்டில் லேர்ணர்ஸ் புதிய பாலர் பாடசாலை உதயம் (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பாலர்களின் நன்மைகருதி புதிய பாலர் பாடசாலை ஒன்று 03-01-2013  வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.


காத்தான்குடி -முதலாம் குறிச்சி இலக்கம் 514.சாவியா வீதி எனும் முகவரியில் ஹனா லிட்டில் லேர்ணர்ஸ் எனும் பெயர் தாங்கி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இப் பாலர் பாடசாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஹனா லிட்டில் லேர்ணர்ஸ் பாலர் பாடசாலையின் அதிபர் ஜனாபா ஜெஸீமா முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இப் பாலர் பாடசாலை திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்ääகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர்ääமனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் ஜேபிääகாத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுபைர்ääபுதிய காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் ஏ.எல்.ஆதம்லெப்பை(பலாஹி)ääகாத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளரும்ääசிரேஷ் ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி)ääஇலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்ääஹனா லிட்டில் லேர்ணர்ஸ் பாலர் பாடசாலையின் செயலாளர் ஜூனைட்ääபாலர்களின் தோழன் லக்கி உட்பட உலமாக்கள் ஊர் பிரமுகர்கள்ääபுத்திஜீவிகள்ääகல்வியலாளர்கள் ääபெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பாலர் பாடசாலையை இணைந்ததாக ஹனா சிங்கள அகடமியும் ஆரம்பித்துவைக்கப்ட்டுள்ளது இதில் பாடசாலையில் தரம் 3 தொடக்கம் தரம் 9 வரையுள்ள மாணவ மாணவிகள் சிங்கள பாடம் கற்பதற்காக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

No comments:

Post Top Ad