முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் செலவில் மட்டு- தாழங்குடா பிரதேசத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் முன்பள்ளிப் பாடசாலை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 30, 2014

முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் செலவில் மட்டு- தாழங்குடா பிரதேசத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் முன்பள்ளிப் பாடசாலை (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில்; இன நல்லுறவை பேணும் வகையில் வெவ்வேறுவிதமான சமூக அபிவிருத்திப் பணிகளை செய்துவரும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனைவருக்கும் கல்வி எனும் முன்பள்ளி பாலர் கல்விக்கு உதவும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் முஸ்லிம் எயிட் இலங்கை கள அலுவலகத்தின் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் பாலர் பாடசாலை திறப்பு விழா 30-01-2014 இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.


ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எஸ்.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பிரதிநிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டு மேற்படி பாலர் பாடசாலையை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இதன் போது பாலர் பாடசாலையின் நினைவுக் கல் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவை பேணும் வகையில் பல்வேறு சமூக அபிவிருத்திப் பணிகளை செய்துவரும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பணிப்பாளர் பைசர் கானுக்கு அவரின் சேவையைப் பாராட்டி அதிதிகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு  உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதனினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இப் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் 35 பாலர்களுக்கு புத்தகப்பையும்ää பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்ääதாழங்குடா பாடசாலை அதிபர் சா.மதிசுதன்ääஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் சி.ஜே.அருட்பிரகாசம்ää முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மிää முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் உட்கட்டுமான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முனீர் உட்பட ஊர் பிரமுகர்கள் ääஊடகவிலாளர்கள் ääபெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


No comments:

Post Top Ad