மட்டு-நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி சட்டத்தரணி நூர்தீன் சாமஸ்ரீ தேசமானிய பட்டம் வழங்கி கௌரவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

மட்டு-நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி சட்டத்தரணி நூர்தீன் சாமஸ்ரீ தேசமானிய பட்டம் வழங்கி கௌரவிப்பு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன் சாமஸ்ரீ தேசமானிய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரியில் அதன் தேசிய அமைப்பாளர் யு.எல்.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்ற 22வது சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது வழங்கும் விழாவின் போது இந்த பட்டம் அருக்கு வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்ää கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை உட்பட அதிதிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு இந்த கௌரவத்தை இவருக்கு வழங்கி வைத்தனர்.

சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும்ää மரண விசாரணை அதிகாரியுமென்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சட்டத்தரணி நூர்தீன் ஒரு சிறந்த சமூக சேவையாளரும் கல்விமானும் என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad