மூதூர் நத்வா பாலர் பாடசாலையின் விளையாட்டு விழாவும்,பரிசளிப்பு விழாவும் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

மூதூர் நத்வா பாலர் பாடசாலையின் விளையாட்டு விழாவும்,பரிசளிப்பு விழாவும் (படங்கள் இணைப்பு)


மூதூர் நத்வா நலன்புரிச் சங்கத்தின் கீழ் இயங்கும் நத்வா பாலர் பாடசாலையின் 2013 ஆண்டுக்கான பிரியாவிடைபெறும் 120 மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் முறையே 2014-01-04 சனிக்கிழமையும்,2014-01-05 ஞாயிற்றுக்கிழமையும் தி/மூதூர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


சனிக்கிழமை திறந்தவெளி மைதானத்தில் இடம்பெற இருந்த விளையாட்டுப் போட்டி மழைகாரணமாக தி/மூதூர் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று ஞாயிற்று கிழமை நத்வா பாலர் பாடசாலையிலிருந்து பிரியாவிடைபெறும் 120 மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதல்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் வினோத உடை நிகழ்வு அனைவரையும் கவர்ந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

நத்வா நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும் ஆசிரியருமாகிய எம்.எம்.முஸம்மில் ஆசிரியரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் நித்தியானந்த மூர்த்தி , மூதூர் வலயக்கல்வி உப பணிப்பாளர் ஜஹார் , மூதூர் பிரதேச சபை உறுப்பினரான ஜஸ்ரி ஜவாப்தீன் (நளிமி) ,தேசிய காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகிய டாக்டர் சியா , லரீப் G.S . நிஸார் RDO , பெரோஸ் RDS ஆகியோர் பங்கு பற்றி சிறப்பித்ததுடன் , இப்பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வை கண்டுகழித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:

Post Top Ad