மூதூர் மத்திய அகதியா லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, January 28, 2014

மூதூர் மத்திய அகதியா லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு (படங்கள் இணைப்பு)


மூதூர் மத்திய அகதியா நடாத்தி வரும் லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலை 2013 ஆண்டு மாணவர்களுக்கான வருடாந்த நிகழ்வு 26-01-2014 அன்று மூதூர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு 2013 ஆண்டுக்கான முன்பள்ளி வாழ்வை முடித்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கான சான்றிதல்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மூதூர் மத்திய அகதியாவின் தலைவரும் மத்திய அகதியாவின் ஸ்தாபகர் மர்ஹூம் அப்துல் லத்தீப் பசீர் அவர்களின் சகோதரருமாகிய மூசீன் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய எம்.எஸ் தௌபீக் கௌரவ விருந்தினர்களாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஜஸ்ரி ஜவாப்தீன் (நளீமி) பீ.ரி.எம்.பைசர் மற்றும் மூதூர் வலயக்கல்வி உதவி பணிப்பாளர் ஜஹார் ஆசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கான பரிசில்கள் மாணவர்களின் பெற்றோர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை இந்த பாலர் பாடசாலைக்கு கட்டிட வசதி இல்லாமையினால் இப்பாடசாலைக்கான கட்டிடத்தினை கட்டித்தருவதாக இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad