யாழில் கடும் மழை சில பாடசாலைகளுக்கும் விடுமுறை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

யாழில் கடும் மழை சில பாடசாலைகளுக்கும் விடுமுறை


யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் கடுமையான மழை பெய்து வருகின்றது. காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி மற்றும் தீவகக் கரையோரப் பாடசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரையோரப் பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக வடமாகாண கரையோரப் பகுதிகளில் இன்று பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையிலேயே மேற்படி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad