நினைவிருக்கிறதா? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 09, 2014

நினைவிருக்கிறதா?


ஆயிரக்கணக்கான கண்களை கதற செய்து நெஞ்சை உருக்கிய அந்த சம்பவம் யாருக்கு நினைவிருக்கிறது..?


நியாயம்இ அநியாயம் என்ற பலதரப்பட்ட விவாதங்களுக்கு மத்தியில் ஈவிரக்கமே இல்லாத ஒரு கல்நெஞ்சம் கொண்ட அரேபியா குடும்பத்தின் கொடூர பிடியில் சிக்குண்டு வெளிவர முடியாது தவித்து நின்ற ஒரு ஏழை தாயின் மகள் றிசான நபீக் தலை துண்டிக்க பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரத்த கரை படிந்த தினம் இன்றாகும்.

கடந்த 09.01.2013 அன்று சவுதி அரசின் நீதிமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக சகோதரி ரிசானாவுக்கு தலை சீவப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற பட்டு இன்றோடு 1 வருடம் பூர்த்தியாகிறது.

பல்லாயிர கணக்கான உள்ளங்களால் பேசப்பட்டு விடைபெற்ற ரிசானாவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஈடேற்றம் அளிக்க வேண்டும் . தன குடும்பம் பற்றி ரிசானா கண்ட கனவு நனவாக வேண்டும் நியாய தீர்ப்பு நாளன்று ரிசானாவின் கண்ணியத்தை எல்லோரும் காணவேண்டும்.
சிறையின் உள்ளிருந்து விட்ட கண்ணீருக்கும் பெருமூச்சுக்கும் அல்லாஹ் பெரும் பாக்கியங்களை மறுமையில் நல்க வேண்டுமென உங்களோடு நாமும் பிரார்த்திக்கின்றோம் .

அல்மஷூரா செய்திபிரிவு சார்பாக
Zeyed A.Hamid A Majd

No comments:

Post Top Ad