அந்நிய மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் நாட்டில் அளவிட முடியாத அழிவுகள் ஏற்படும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

அந்நிய மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் நாட்டில் அளவிட முடியாத அழிவுகள் ஏற்படும்


அந்நிய மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்பட்டால் நாட்டில் அளவிட முடியாத அழிவுகள் ஏற்படும் என சர்வமத கலந்தாய்வு ஒன்றியம் எச்சரித்துள்ளது.
சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் அதனை சரியாக அமுல்படுத்தாத காரணத்தினாலேயே தொடர்ந்தும் மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
அத்துடன் இப்படியான சம்பவங்கள் தொடர்பில் தேசிய ஊடகங்கள் உரிய முறையில் செய்திகளை வெளியிடுவதில்லை எனவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வமத கலந்தாய்வு ஒன்றியத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத குருமார் அங்கம் வகிக்கின்றனர்.
காலி, ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ வழிப்பாட்டு நிலையம் ஒன்றின் மீது பௌத்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பௌத்த அமைப்புக்கும் பொலிஸாருக்கும் இடையில் அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad