நிகாப் முறை­யினை தடை செய்­யா­விடின் நாட்டிற்கே பிரச்­சி­னை­ ! பொதுபல சேனா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

நிகாப் முறை­யினை தடை செய்­யா­விடின் நாட்டிற்கே பிரச்­சி­னை­ ! பொதுபல சேனா


(vi)
போதைப்­பொருள் கடத்­தலின் தேசிய சின்­ன­மாக பர்தா மாறி விட்­டது. இலங்­கையில் உட­ன­டி­யாக நிகாப் முறை­யினை தடை செய்­யா­விடின் நாட்டிற்கே பிரச்­சி­னை­யாகும் என பொது­ ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்துள்ளது.
இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்­கையில் இன்று முஸ்லிம் அடை­யா­ளங்­களை வைத்தே போதைப்­பொருள் கடத்­தல்கள் இடம்­பெ­று­கின்­றது. குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, ஹபாயா ஆடை­களை அணிந்து கொண்டே இலங்­கைக்குள் போதைப்­பொ­ருட்­களை எடுத்து வரு­கின்­றனர்.
முஸ்­லிம்­களை சாட்டி ஏனையோர் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தனால் முஸ்லிம் மதத்­திற்கும் அச் சமூ­கத்­தி­ன­ருக்கும் அவப் பெயரை ஏற்­ப­டுத்­து­கின்­றது.
அதேபோல் முஸ்லிம் தீவி­ர­வாத கொள்கை உடை­ய­வர்கள் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தனால் இலங்­கையில் ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் வாழும் முஸ்லிம் மக்­க­ளையும் தவ­றான எண்­ணத்தில் சித்­திரிக்கும் நிலை காணப்­ப­டு­கின்­றது.
மத கொள்­கை­களை விடவும் தேசிய பாது­காப்பே முக்­கி­ய­மாகும். பெளத்­தர்கள் இந்­துக்கள் எவ்­வாறு வாழ்­கின்­ற­னரோ அதேபோல் முஸ்­லிம்­களும் வாழ வேண்டும்.
இலங்­கையில் இன்று அதி­க­ள­வி­லான போதைப்­பொருள் கொள்­க­லன்கள் சிக்­கு­வ­தற்கும் அர­சி­யலில் குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் முஸ்லிம் தீவி­ர­வா­தமே பிர­தான கார­ண­மாகும்.
மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் உற­வு­களை வைத்­தி­ருக்கும் இலங்கை முஸ்­லிம்கள் அந் நாடு­களில் இருந்து போதைப்­பொ­ருட்­களை வாங்கி இலங்­கையில் இளை­ஞர்­களின் மத்­தியில் பரப்­பு­கின்­றனர்.
முஸ்­லிம்­களின் நிகாப் பர்தா ஆடை­க­ளையும் மத்­திய கிழக்கில் இருந்து வரும் முஸ்­லிம்­க­ளையும் தடை செய்ய வேண்டும்.

No comments:

Post Top Ad