அஸாபீருல் ஜன்னாஹ் அல் குர் ஆன் பாடசாலையின் இரண்டாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, January 05, 2014

அஸாபீருல் ஜன்னாஹ் அல் குர் ஆன் பாடசாலையின் இரண்டாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி-02 இமாம் அபூ ஹனீபா வீதி உமர் ஷரீப் லேனில் கடந்த 5 ஐந்து வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவரும் அஸாபீருல் ஜன்னாஹ் அல் குர் ஆன் முன்மாதிரிப் பாடசாலையின் இரண்டாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் 05-01-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.


அஸாபீருல் ஜன்னாஹ் அல் குர் ஆன் முன்மாதிரிப் பாடசாலையின் அதிபர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம்.அன்ஸார் மக்கி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக காத்தான்குடி  ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷேய்க் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி) கலந்து கொண்டார்.

இதன் போது குர் ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற அஸாபீருல் ஜன்னாஹ் அல் குர் ஆன் முன்மாதிரிப் பாடசாலை மாணவ மாணவிகள் அதிதிகளினால் விருதும் ääசான்றிதழும்ääபரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அல் குர் ஆன் முன்மாதிரிப் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இம்முறை அல் குர் ஆனை ஓதி முடித்த 21 மாணவ மாணவிகளின் குழுவும் வெளியேறினர்.

இந்நிகழ்வில் ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷேய்க் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி)ää அதன் செயலாளர் எம்.எச்.ஜிப்ரி மதனி ääமஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் செய்னுலாப்தீன் மதனி ääகுர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபை பரீட்சைக்குழு உறுப்பினர் மௌலவி எச்.எம்.சாஜஹான் (பலாஹி) ääகல்முனை ஹாமியா அறபுக் கல்லூரி விரிவுரையாளர் ஏ.ஜி.எம்.ஜலீல் (மதனி)ää ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் அல் ஹாபிழ் இர்பான்ää ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை செயலாளர் மிஹ்ழார்ääசமுர்த்தி முகாமையாளர் சுல்மி உட்பட உலமாக்கள்ääஊர் பிரமுகர்கள்ääபுத்திஜீவிகள்ääகல்வியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

No comments:

Post Top Ad