வரிப்பத்தான்சேனை ஜும்மா பள்ளிவாசல் நிர்மாணப்பணிக்கு உதவி கோரல் ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

வரிப்பத்தான்சேனை ஜும்மா பள்ளிவாசல் நிர்மாணப்பணிக்கு உதவி கோரல் !


MOHAMED AJWATH (DOHA, QATAR)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவன் அல்லாஹுவின் திருப்பெயரால் ! அஸ்ஸலாமு அலைக்கும்.
அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை எனும் கிராமமானது சகோதர இனத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,500 முஸ்லிம் குடும்பங்களை கொண்ட ஒரு சிறிய கிரமமாகும். கடந்த கால யுத்தத்தினால் பதிக்கப்பட்ட இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாதாரண கூலித்தொழில் (75%) செய்துவருகின்றனர்.


இவ்வூரில் அமையப்பெற்றுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஆனது சுமார் 60 வருடங்கள் பழமைவாய்ந்த பள்ளிவசலாகும். இப்பள்ளிவாசல் கட்டடத்தின் தற்போதைய நிலை (தோற்றம்) மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது. சுற்றுமதில் சுவர்கள் மற்றும் கூரைகள் உடைந்து கீழேவிழும் அளவுக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வுழு செய்யக்கூடிய வசதிகள் சீர்குலைந்து காணப்படுவகவும் மலசல கூட வசதிகள் சீரின்மை போன்ற பல குறைபாடுகளுடன் ஜும்மா உட்பட அனைத்து வக்து தொழுகைகளுக்கு வரும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இவ்பழைய கட்டடத்தையும், ஜும்மாவுக்குவரும் மக்களையும் கவனத்தில் கொண்டு அவசரமாக இதற்கான மாற்றீட்டினை செய்வதற்கு கூட போதிய வசதிகள் (கையிருப்பு) இல்லாமையினால் பள்ளிவாசல் நிர்வகத்தினர்கள் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும் புதிய கட்டடத்தின் தேவையை வேண்டி நிற்கும் இப்பள்ளிவாசலின் கட்டுமானபணிகளை ஆரம்பிப்பதற்கு மக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர்கள்.

அல்லாஹ்வின் வீடான இப்பள்ளிவாசலை கட்டி பூரனப்படுத்துவதட்கு தேவையான உதவிகளை முடியுமானவர்கள் வழங்கி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற நம்மாலான உதவிகளை செய்யவேண்டும். மேலும் நிலையான தர்மமான இவ்அமலை நிறைவேற்றி இம்மையிலும் மறுமைலும் அதற்கான கூலியை பெற தயாராக வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
சகோதர்களே !

அல்லாஹ்வினுடைய வீட்டை கட்டி முடிப்பது நமது கடமைஇ உங்களுடைய உதவிகளை விரைவு படுத்துங்கள். நம்மால் பண உதவி செய்ய முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு இதை தெரிய படுத்துங்கள். உங்களின் இம்முயட்சியால் எங்கோ ஒருவர் உதவி செய்ய முன் வரலாம். இன்ஷா அல்லாஹ்.

இப்பள்ளிவாசல் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு 077 4897799இ 075 6417045 இவ் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும்.

இப்பள்ளிவாசலின் கணக்கு இலக்கம்.

PEOPLE'S BANK AMPARA

A/C. 015-1001-0-2909443

இத்தகவலைமக்களின் பெரு மதிப்பை பெற்றிருக்கும் உங்களது இணையத்தில் பிரதியிட்டு வாசகர்கள் தெளிவினை பெற்றுக்கொள்வதற்கு உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

உங்களது பேருதவியினை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. அமீன்இ
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post Top Ad