கிழக்கு மாகாணசபை அமர்வு மறு அறிவித்தல் வரை சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியினால் ஒத்தி வைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

கிழக்கு மாகாணசபை அமர்வு மறு அறிவித்தல் வரை சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியினால் ஒத்தி வைப்பு

(ad)

கிழக்கு மாகாணசபை அமர்வு மறு அறிவித்தல் வரை சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியினால் ஒத்தி வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாணசபையின் 201ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு நேற்று (28) காலை 9.30 மணிக்கு திருகோணமலை கிழக்கு மாகாணசபை கட்டிடத் தொகுதியில் தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது. 


இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட உரையின் போது எதிர் கட்சி உறுப்பினர் இ.துரைரெட்ணம் அவர்களினால் அவசர தனிநபர் பிரேரணை ஒன்றினை முன் வைப்பதற்கு தவிசாளரிடம் அனுமதி கேட்போது நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்காதபடியினால் விவாதத்திற்கு விடப்பட்டு தேனீர் இடைவேளைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. 

அவசரப்பிரேரணையா மட்களப்பு உறுப்பினரால் அண்மையில் நடைபெற்ற முகாமைத்து உதவியாளர் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களை தமிழர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கவில்லை. 

ஆனால் ஏனைய இனங்களைச் சேர்ந்த குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து விகிதாசாரம் என்ற போர்வையில் தமிழ் இனங்களை புறக்கனிப்பது என்ற பிரேரனையை முன்வைத்தார். 

மீண்டும் சபை கூடியவேளை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ளவில்லை இதனால் தவிசாளரினால் சபை மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து எதிர் கட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஜக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

No comments:

Post Top Ad