குவைத்தில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் ஒருவர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, January 04, 2014

குவைத்தில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் ஒருவர் கைது


குவைத் நாட்டில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச்சென்ற ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 121 போத்தல் சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையான இஸ்லாமிய சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் குவைத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
முபாரக் அல் கபீர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
புத்தாண்டை கொண்டாடும் நோக்கில் கசிப்பு காய்ச்சியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad