கொக்கிளாய் கடல்நீரேரியின் சிறுகடல் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 30, 2014

கொக்கிளாய் கடல்நீரேரியின் சிறுகடல் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் (படங்கள் இணைப்பு)(ஏ.சீ.ஹாலீத்- குச்சவெளி விசேட நிருபர்)

பாரம்பரிய கட்டுவலைத் தொழிலுக்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறும் அல்லது கொக்கிளாய் களப்பில் சட்டவிரோத தொழில்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு பாரபட்சமற்றமுறையில் தடைவிதிக்கக்கோரியும் புல்மோட்டையின் உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் உலமாசபையினர்கள் கடற்றொழில் அமைச்சரைச் சந்தித்து பேசிய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் மேற்படி கோரிக்கைகளுக்கு தீர்வினைப்பெற்றுத்தரக்கோரி  நூற்றுக்கணக்கான புல்மோட்டை சிறுகடல் தொழிலாளர்கள் 2014-01-29 புதன்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து புல்மோட்டை திருமலை சந்தியில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


புல்மோட்டைப் பிரதேசத்தின் பிரதான ஜீவனோபாயத் தொழிலான கொக்கிளாய் கடல்நீரேரியில் சிறுகடல் மீனவர்களின் பாரம்பரியக்கட்டுவலைத் தொழில் மூலம் அன்றாடம் பிழைப்பு நடத்திவந்தனர். கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் திருமலை மற்றும் முல்லைத்தீவு அதிகாரிகளினால் மேற்படித் தொழில் தற்போது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.


குச்சவெளிää பதவிஸ்ரீபுரää கடைத்துறைப்பற்று போன்ற பிரதேச செயலக எல்லைகளுக்குட்பட்ட கொக்கிளாய்ää கொக்குத்தொடுவாய்ää கருனாட்டுக்கேணிää தென்னைமரவாடிää சிங்கபுர போன்ற ஊர்களிலிருந்து டிஸ்கோவலை. இளுப்புவலைää போன்ற சட்டவிரோதம் எனக்கருதப்படும் தொழில்கள் நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுவதுடன் தடைசெய்யப்பட்ட இயந்திரப்படகுப்பாவனையும்ää கண்டல்தாவரங்களை அழிக்கும் பலவகையான தொழில்முயற்சிகளும் கொக்கிளாய் களப்பில் நடைபெற்றுவருகின்றநிலையில் பாரபட்சமானமுறையில் புல்மோட்டை மீனவர்களின் கட்டுவலைத்தொழிலுக்கு மாத்திரம் தடைவிதித்துவிட்டு ஏனைய 5 ஊர்களிலிருந்தும் சட்டவிரோததொழில்கள் மற்றும் செயற்பாடகளுக்கு அனுமதிவழங்கப்பட்டதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad