கரும்புச் செய்கை என்ற பெயரில் வடக்கில் காணிகள் சுவீகரிப்பு ! முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

கரும்புச் செய்கை என்ற பெயரில் வடக்கில் காணிகள் சுவீகரிப்பு ! முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு


கரும்புச் செய்கை என்ற பெயரில் வடக்கில் 71 ஆயி­ரத்து 716 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இது திட்­ட­மிட்ட சதி­யாகும். இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.
அர­சாங்கம் வடக்கு, கிழக்கில் காணி­களை சுவீ­க­ரித்து வரு­கின்­றது. இரா­ணுவத் தேவைக்­கென ஒரு பக்­கமும் அபி­வி­ருத்­திக்­கென மறு­பக்­கமும் காணிகள் திட்­ட­மிட்­ட­வ­கையில் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை நாம் கடு­மை­யாக கண்­டிக்­கின்றோம்.
கரும்பு உற்­பத்தி என்ற பெயரில் அர­சாங்கம் மேற்­கொள்ளும் சுவீ­க­ரிப்பு திட்­டத்தை உட­ன­டி­யாக கைவி­ட­வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தினார்.
கரும்பு உற்­பத்­தியை மேற்­கொள்­வ­தற்­கென வடக்கில் முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் 71 ஆயி­ரத்து 716 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் எதிர்­வரும் 3ம் திகதி சீனிக்­கைத்­தொழில் அபி­வி­ருத்தி அமைச்சர் லக்ஷ்மன் சென­வி­ரட்னவினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இது குறித்து கருத்து தெரி­வித்­த­போதே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்:-
வட­மா­கா­ணத்தில் வயல் செய்கை நிலங்­களும், மேட்­டு­நி­லப்­ப­யிர்­செய்கை நிலங்­களும், காடு­க­ளுமே காணப்­ப­டு­கின்­றன. வடக்கில் 71ஆயி­ரத்து 716 ஆயிரம் ஏக்கர் காணி­களை அர­சாங்கம் சுவீ­க­ரிக்க முயல்­கின்­றது. கரும்பு உற்­பத்தி என்ற பெயரில் தன்­னிச்­சை­யாக இந்தச் செயற்­பாட்டில் அர­சாங்கம் ஈடு­ப­டு­கின்­றது.
வடக்கில் இரா­ணுவத் தேவைக்­கென பெரு­ம­ள­வான காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதேபோல் அர­சாங்­கமும் அபி­வி­ருத்தி என்ற பெயரில் காணி­களை சுவீ­க­ரித்து வரு­கின்­றது. மொத்­தத்தில் காணி அப­க­ரிப்பே இங்கு இடம் பெறு­கின்­றது.
கரும்புச் செய்­கைக்­கென காணி சுவீ­க­ரிப்­பது தொடர்பில் வடக்கு மாகாண மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட மாகா­ண­சபை பிர­தி­நி­தி­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­ட­வில்லை. இவ்­வாறு கலந்­து­ரை­யா­டாது காணி­களை சுவீ­க­ரிக்க முயல்­வது முற்­று­மு­ழு­தான தவ­றான செயற்­பா­டாகும்.
இவ்­வா­றான சுவீ­க­ரிப்பு அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட காணிக்­கொள்ளை முயற்­சி­யாகும். இங்கு கரும்பு உற்­பத்தி செய்­வ­தானால் அதற்­கு­ரிய மண்­வளம் உள்­ளதா? அதற்குப் போத­மான நீர்­வளம் உள்­ளதா என்­பது குறித்து ஆரா­ய­வேண்டும். இத்­த­கைய ஆராய்ச்­சிகள் எத­னையும் நடத்தாது திட்டமிட்ட வகையில் காணிகளை சுவீகரிக்க முயல்வது அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பேயாகும்.
அர­சாங்­கத்தின் இந்த சுவீ­க­ரிப்பு செயற்­பாட்­டிற்கு கடும் கண்­ட­னங்­களைத் தெரி­விக்­கின்றோம். இந்த முயற்­சி­யா­னது திட்­ட­மிட்ட சதி­யாகும். இதனை அனு­ம­திக்க முடி­யாது என்று தெரிவித்தார்.
வடக்கு மக்களின் காணிகள் அபகரிப்பு - ஜே.வி.பி
கரும்பு உற்­பத்தி என்ற பெயரில் அர­சாங்கம் வடக்கு மக்­களின் காணி­களை அப­க­ரிக்­கின்­றது.வடக்கில் மக்கள் வாழ்­வ­தற்கு காணி­களை வழங்­காது அபி­வி­ருத்­திக்­காக காணி­களை அப­க­ரிப்­ப­தா­னது அர­சாங்­கத்தின் சுய­நலப் போக்­கி­னையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது.
மேலும் அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணாது பிரச்சினை­களை வளர்த்துக் கொண்­டி­ருக்­கின்­றது.ஜனா­தி­ப­தியின் இவ்­வா­றான செயற்­பா­டு­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம் எனவும் அக் கட்சி தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்­பாக மக்கள் விடு­தலை முன்­னணி ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் தெரி­விக்­கையில்
யுத்தம் முடி­வ­டைந்து நான்கு ஆண்­டு­க­ளாகியும் இன்று வரையில் வடக்கில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் இருப்­பி­டங்­க­ளின்றி வாழ்­கின்­றனர். இரா­ணுவ முகாம்­களும் அர­சாங்­கத்தின் கட்­டி­டங்­க­ளுமே இன்று வடக்கில் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளன. இவற்­றினை கவ­னத்தில் கொள்­ளாத அர­சாங்கம் இன்று கரும்பு உற்­பத்­தி­யென்ற பெயரில் பொது­மக்­களின் இடங்­களை அப­க­ரிக்க நினைக்­கின்­றது.
அர­சாங்கம் உற்­பத்­தி­க­ளையும் அபி­வி­ருத்­தி­க­ளையும் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றதே தவிர இவற்றில் மக்­க­ளுக்கு எவ்­வித நன்­மைகள் கிடைத்­த­தாகத் தெரி­ய­வில்லை. நாட்டில் விலை­யேற்­றமும் பொரு­ளா­தாரச் சிக்­க­ல்களும் அதி­க­ரித்துக் கொண்­டுதான் இருக்­கின்­றன. பொது மக்­க­ளுக்கு காணி­களை வழங்­காது தமது அர்த்­த­மற்ற செயற்­பா­டு­க­ளுக்­காக உற்­பத்­தி­யென்ற பெயரில் காணி­களை அப­க­ரிப்பது அர­சாங்­கத்தின் சுய­நலப் போக்­கினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.
மேலும் இன்று அர­சாங்கம் சர்­வ­தேச ரீதியில் பல்­வேறு பிரச்­சினை­களை சந்­தித்து வரு­கின்­றது.போர்க் குற்­றங்கள் மனித உரிமை மீறல்கள் என சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு அர­சாங்கம் முகங்­கொ­டுக்க தயா­ராகி வரு­கின்­றது. இந்­நி­லையில் உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களை தீர்த்து நாட்டில் அமை­தி­யினை ஏற்­ப­டுத்த வேண்டும். அதை­வி­டுத்து அர­சாங்கம் தொடர்ந்தும் உள்­நாட்டில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வரு­மானால் அது ஆட்­சி­யி­னையே பாதிக்கும்.
வடக்கு மாகாணம் அனை­வ­ரி­னதும் பார்­வையில் உள்ள நிலையில் அர­சாங்கம் வடக்கில் காணி சுவீ­க­ரிப்பு இரா­ணுவ குவிப்­பு­களை தடுத்­தாக வேண்டும்.அபி­வி­ருத்தி என்ற பெயரில் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக்ச அர­சாங்கம் செய்யும் அட்­டூ­ழி­யங்­களை மக்கள் விடு­தலை முன்­னணி வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது எனவும் அவர் தெரிவித்தார்.
குடியேற்றத்திற்கு இடமளிக்க முடியாது - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
வடக்கின் உற்­பத்தி திட்­டங்­களில் அப்­ப­குதி மக்­களே அதிகம் உள்­வாங்­கப்­பட வேண்டும். கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட நிலைமை வடக்கு தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்­டு­விடக் கூடா­தென முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது.
உற்­பத்தி திட்­டத்தின் பின்­ன­ணியில் சிங்­களக் குடி­யேற்­றங்­களே இருக்­கு­மெனின் அதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இவ் விட­யத்தில் எச்­ச­ரிக்­கை­யாக செயற்­ப­டு­வதே அவ­சியம் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் செய­லாளர் ஹசன் அலி தெரி­விக்­கையில்.
வட மாகா­ணத்தில் கரும்பு உற்­பத்தி திட்­டத்­தினை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது. அபி­வி­ருத்தி திட்­டத்தின் கீழ் வடக்கில் 71.716 ஹெக்­டெயர் காணி­களை அர­சாங்கம் பெற்­றுக்­கொள்ள தீர்­மா­னித்­துள்­ளது.
வடக்கில் இவ்­வா­றா­ன­தொரு திட்­டத்­தினை செய்­வ­தாயின் வடக்கு மக்­கள் அதி­க­ளவில் உள்­ளக்­கப்­பட வேண்டும். அவர்­களின் காணி­களை வாங்கி வேறு பகு­தி­யினர் பயிர்­செய்­கை­களை செய்­யக்­கூ­டாது.
கிழக்கில் முஸ்லிம் மக்­களின் நிலங்­களில் கரும்பு உற்­பத்­தி­களை மேற்­கொண்டு இன்று அவை அர­சாங்­கத்தின் தரிசு நிலங்­க­ளாக மாறி­விட்­டது. சிங்­க­ள­வர்­களை வைத்து விவ­சா­யங்­களை மேற்­கொண்­டனர். இதனால் கிழக்கில் உள்ள பெரும்­பா­லான முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­ட­தோடு இன்று வரையில் அவர்­க­ளுக்­கான தீர்வோ அல்­லது முஸ்­லிம்­களின் நிலங்­களோ கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.
இதே நிலைமை வடக்­கிலும் ஏற்­பட்டு விடக்­கூ­டாது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான நிலப்­ப­ரப்­பு­களில் அர­சாங்கம் பயிர்­செய்­கை­களை செய்­வ­தென்­பது அர­சாங்­கத்தின் திட்­ட­மாக இருக்­கலாம். ஆனால் அப்­ப­குதி மக்கள் அந்த நிலங்­களை நம்­பியே வாழ்­கின்­றனர் என்­பதை அர­சாங்கம் மறந்து விடக்­கூ­டாது.
இன்று வடக்கில் ஏரா­ள­மான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. முதலில் அவற்­றிற்­கான தீர்­வு­களை அர­சாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதே போல் அவர்­க­ளுக்­கான அபி­வி­ருத்­தி­க­ளையும் அர­சாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்­டிய கடமை உள்­ளது. அதே போல் இவ் அபி­வி­ருத்தி திட்­டங்­களின் பின்­னணி என்­ன­வென்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கில் இவ்­வா­றான வேலைத் திட்­டங்­களை செய்து சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஏற்படுத்த அர­சாங்கம் முயற்­சிக்குமாயின் உடனடியாக அவற்றை தடுத்து நிறுத்த வேணடும். வடக்கு கிழக்கில் மட்­டுமே இன்று சிறு­பான்மை ஆதிக்கம் காணப்­ப­டு­கின்­றது.
இங்கு மட்­டுமே எமது உரி­மை­களை செயற்­ப­டுத்த குரல் கொடுக்க முடி­யு­மா­கவும் உள்­ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் எமது பிரதி நிதித்துவத்தை இழக்கும் வகையில் அரசாங்கம் செற்படக் கூடாது.
இவ் வியத்தில் வடக்கின் அரசியல் தலைமைகளும் மக்களும் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும். தமது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad