சவூதி வாகன விபத்தில் இலங்கையர் மரணம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

சவூதி வாகன விபத்தில் இலங்கையர் மரணம்


சவூதி அரேபியாவின் ஜூபேல் என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த இவர், உட்பட 8 பேர் பணி முடிந்து தங்குமிடத்தை நோக்கி வாகனத்தில் சென்ற பொழுதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இலங்கைப் பிரஜை உட்பட 4 பேர் பலியாகினர். பொலன்நறுவை வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஆர்.டப்ளியூ.எஸ்.ரத்நாயக்க என்ற இலங்கை பிரஜையே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
அத்துடன் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மூவர் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

No comments:

Post Top Ad