“முஸ்லிம்கள் ஆயுத போராட்டத்தில் பங்கேற்கவில்லை ” முஸ்லிம் கவுன்ஸில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு கடிதம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

“முஸ்லிம்கள் ஆயுத போராட்டத்தில் பங்கேற்கவில்லை ” முஸ்லிம் கவுன்ஸில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு கடிதம்

(tm)

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்காவிற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா  அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.


முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை 
தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.


இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் கையொப்பமிட்டு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கையிலுள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற செய்தியை நாம் விரக்தியுடன் வாசித்தோம்.

இந்த செய்திக்கான ஆதாரமா இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எழுதப்பட்ட கடிதமொன்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த எந்தவொரு ஆயுத போராட்டத்திலும் முஸ்லிம்கள் பங்கேற்கவில்லை. 

பல ஆத்திர மூட்டல்கள் காணப்பட்டபோதும் முஸ்லிம்கள் அமைதியாகவே இருந்துள்ளனர். குறித்த செய்தி மூலம் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து இலங்கையிலுள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவர் எனும் எண்ணத்தை தூண்டுகிறது.

எனவே இது இலங்கை முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்க வைத்துள்ளது. ஆதலால் இயன்றளவு விரைவாக உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி நாம் கேட்டுக்கொள்கின்றோம்".

No comments:

Post Top Ad