மட்டு-மாவட்டத்தில் முதற்தடவையாக முறிவு தறிவு சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 02, 2014

மட்டு-மாவட்டத்தில் முதற்தடவையாக முறிவு தறிவு சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு-(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக முறிவு தறிவு சிகிச்சைக்கான ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையம் காத்தான்குடி பிரதேசத்தில் இலக்கம் 197ää4 எஸ்.எம்.ரி. வீதி புதிய காத்தான்குடி-06 எனும் முகவரியில் நேற்று 2014 வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி நேற்று புதன்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.


அலி இப்னு ஸீனா எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இவ் முறிவு தறிவு சிகிச்சை நிலையத்தை காத்தான்குடிப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நஸீர்தீன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.


இதன் போது இவ் வைத்திய சிகிச்சை நிலையத்திற்கான பெயர் பலகையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நஸீர்தீன்ää இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவர் ரி. வசந்தராசாää இ.செ.ச. மட்டு. மாவட்டக் கிளையின் உப தலைவரும் காத்தான்குடி கிளையின் தலைவருமான எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்ääவார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் றஹ்மதுல்லாஹ்ääமௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (பலாஹி)ääஆயுர்வேத வைத்தியர்  டாக்டர். ஏ.யூ.ஏ. ஹமீத் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
இவ் முறிவு தறிவு சிகிச்சைக்கான ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையத்தின் வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.யூ.ஏ. ஹமீத் இலங்கை நாட்டில் ஆயுர்வேத முறிவு தறிவு வைத்தியத்துறையில் பிரதித்து பெற்று விளங்கும் மஹியங்கனை ஹஸலக நகரைச் சேர்ந்த டாக்டர் பி.ஜி. வில்லியமின் சிரேஷ்ட வைத்திய மாணவனாக கடந்த 14 வருடங்களாகப் பயிற்சிகள் பெற்றுää இலங்கை ஆயுர்வேத வைத்திய சiபினால் நடாத்தப்பட்ட பரீட்சைகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்று தறிவு முறிவு வைத்தியராக சான்றிதழ் பெற்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad