குச்சவெளிப் பிரதேசசபையின் புத்தாண்டு நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 02, 2014

குச்சவெளிப் பிரதேசசபையின் புத்தாண்டு நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)


(ஏ.சீ.ஹாலீத்)

2014ம் ஆண்டில் வினைத்திறனுடன் பிரதேசசபையை இயங்கவைக்கும் வகையில் பிரதேசசபைத் தலைவர் ஏ.முபாறக் அவர்கள் சபை ஊளியர்களை உற்சாகப்படுத்துவதற்காக 2014-01-01 அண்று புல்மோட்டை உப அலுவலகத்தில் வைத்து தனது சொந்தநிதியிலிருந்து ஒருதொகைப் பணத்தை ஒவ்வொருவருக்கும் வழங்கிவைத்தார்.


இந்நிகழ்வில் தவிசாளர் உரையாற்றுகையில் பிரதேசவாழ் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் புத்தாண்டு சுபீட்சமும்ää சௌபாக்கியமும்ää வெற்றியும் நிறைந்த ஆண்டாக வேண்டுமெண்று இறைவனைப் பிரார்த்தித்தார் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் ஹிஜ்ரி ஆண்டு முஹர்ரம் மாதமே புத்தாண்டாகும் ஆயினும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கிலஆண்டே அரசநிறுவனங்களில் மட்டுமல்ல எமது சகல நடவடிக்கைகளிலும் பின்னிப்பிணைந்து நிற்கின்றது.

அந்தவகையில் இண்றைய நிகழ்வு புத்தாண்டை கொணடாடுவதற்காக ஏங்பாடுசெய்யப்படவில்லை. மாறாக எமது பிரதேசசபை உத்தியோகத்தர்கள்ää  ஊளியர்களை உற்சாகப்படுத்தி வினைத்திறனுடனான சேவைகளை மக்களுக்கு துரிதமாகப் பெற்றுக்கொடுக்கும் வகையில் 2014ம் ஆண்டு திகழவேண்டுமெண்ற எதிர்பார்ப்பிலேயே தாம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக கூறினார்.

இந்நிகழ்வின்போது சேவையைத் தொய்வின்றி செய்வதற்காக புத்தாண்டுப் பரிசாக பிரதேசசபையில் புதிய நியமணங்களும் வழங்கப்பட்டதுடன் அண்மையில் பிரதேசசபைக்குக் கிடைத்த புதிய உழவுஇயந்திரத்தை புல்மோட்டை உப அலுவலகத்திற்குக் கையளிக்கப்பட்டது இதன் மூலமாக புல்மோட்டை பிரதேசத்திலுள்ள கழிவுகள் விரைவாக அகற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் குச்சவெளிப் பிரதேசசபையின் நிலாவெளியிலுள்ள தலைமை அலுவலகத்திலும் புத்தாண்டுக்கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தலைமைஅலுவலக உத்தியோகத்தர் ஊளியர்களுடன் தவிசாளர் ஏ.முபாறக் அவர்கள் நிற்பதைப்படத்தில் காண்கிறீர்கள்.No comments:

Post Top Ad