பயணிகளின் பிரச்சினைகளை முறையிட ஸ்கைப் தொழில்நுட்ப வலைத்தளம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 02, 2014

பயணிகளின் பிரச்சினைகளை முறையிட ஸ்கைப் தொழில்நுட்ப வலைத்தளம்


(vi)
பய­ணி­க­ளுக்கு பாது­காப்­பான போக்­கு­வ­ரத்து சேவையை வழங்கும் நோக்­குடன் பய­ணிகள் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள் 'ஸ்கைப்' தொழில்­நுட்­பத்­தி­னூ­டாக முறை­யீடு செய்­வ­தற்­கான வலைத்­த­ளத்தை தனியார் போக்­கு­வ­ரத்து சேவைகள் அமைச்சர் சி.பி. ரத்­நா­யக்க வைபவ ரீதி­யாக நேற்று ஆரம்­பித்து வைத்தார்.

இச்­சே­வை­யி­னூ­டாக பய­ணிகள் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யாக தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­படும். குறித்த சேவை­யி­னூ­டாக வார நாட்­களில் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி­வரை பய­ணிகள் தனது பிரச்­சி­னை­களை "Private transport services" என்ற ஸ்கைப் வலைத்­த­ளத்­தி­னூ­டாக முறை­யீடு செய்ய முடியும். அத்­தோடு குறித்த சேவையை 24 மணித்­தி­யா­லங்கள் வரை நீடிப்­ப­தற்கு அரசு திட்­ட­மிட்­டுள்­ளது என்று தனியார் போக்­கு­வ­ரத்து சேவைகள் அமைச்சர் சி. பீ. ரத்நா­யக்க தெரி­வித்தார்.
நாவ­லயில் அமைந்­துள்ள தனியார் போக்­கு­வ­ரத்துச் சேவைகள் அமைச்சில் இந்­நி­கழ்வு நடை­பெற்­றது.
இதன்­போது தனியார் போக்­கு­வ­ரத்து சேவைகள் அமைச்சர் சி. பீ. ரத்­நாயக்க ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,
2014 ஆண்டு புதுவருடப் பிறப்பின் போது 'ஸ்கைப்' தொழில்நுட்பத்தினூடாக பய­ணிகள் தமது பிரச்­சி­னை­களை முறை­யீடு செய்ய முடியும். வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக இவ்­வா­றான செயற்­திட்­டத்தை இவ் அர­சாங்­கமே மேற்­கொண்­டுள்­ளது. இவ்­வா­றான செயற்­றிட்­டத்­தி­னூ­டாக பய­ணிகள் அன்­றாடம் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னை­களை இல­கு­வாக தீர்க்க முடியும். இதன்­மூலம் பய­ணி­க­ளுக்கு பாது­காப்­பான போக்­கு­வ­ரத்துச் சேவை­யினை வழங்க முடியும்.
தற்­போது பொது மக்கள் தனியார் போக்­கு­வ­ரத்து துறையின் மீது வெறுப்­ப­டைந்­துள்­ளனர். ஆகையால் தர­மிக்க போக்­கு­வ­ரத்து சேவையை பொது மக்­க­ளுக்கு வழங்க வேண்­டிய தேவை அர­சிற்கு உள்­ளது. இதே­வேளை, எதிர்­வரும் 16 ஆம் திக­தி­யி­லி­ருந்து தனியார் மற்றும் அரச பஸ் போக்­கு­வ­ரத்து சேவை­க­ளுக்கு ஒன்­றி­ணைந்த கால அட்­ட­வணை தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னூ­டாக போட்­டி­க­ளற்ற போக்­கு­வ­ரத்து சேவை­களை வழங்­கு­வ­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
மேற்­படி திட்­டங்­க­ளுக்கு தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு அனு­ம­தி­ய­ளித்­தி­ருப்­ப­துடன், அமைச்­ச­ர­வை­யிலும் பூரண ஆத­ரவு கிடைக்கப் பெற்­றுள்­ளது. அதன் பிர­கா­ரமே ஸ்கைப் தொழில்­நுட்பத்தினூடாக முறை­யீடு செய்யும் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அது போன்றே எதிர்­வரும் 15 ஆம் திக­தி­யி­லி­ருந்து ஒன்­றி­ணைந்த கால அட்­ட­வணை என்ற திட்­டமும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்கு போக்­கு­வ­ரத்து அமைச்சர் குமார வெல்­கம பூரண ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றனர். தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள சாதா­ரண பஸ் வண்டி, அதி­சொ­குசு வண்டி என்ற வேறு­பாட்­டிலும் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வுள்­ளன.
இதன் பிர­காரம் லக்ஸ்றி என்ற சொகுசு பஸ்சேவையால் எவ்­வித பய­னு­மில்லை என பல்­வேறு இடங்­க­ளி­லி­ருந்து முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. தற்போது நாடளாவிய ரீதியில் 3100 இற்கும் மேற்பட்ட பஸ், சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிசொகுசு பஸ் சேவை கள் தொடர்பில் மாற்றமொன்றை அரசு ஏற்படுத்தவுள்ளது. இந்நிலையில் இவ்வருடத்திலிருந்து சிறப்பான போக்கு வரத்துச் சேவைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

No comments:

Post Top Ad