தஜாப்டீனை கட்சியிலிருந்து இடை நிறுத்திவிட்டதாக ஹக்கீம் அறிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

தஜாப்டீனை கட்சியிலிருந்து இடை நிறுத்திவிட்டதாக ஹக்கீம் அறிவிப்பு

(ad)

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.தஜாப்டீன் கட்சியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 


மத்திய முகாமில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் கட்சியினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலை மீறி செயற்பட்டதன் காரணமாகவே குறித்த உறுப்பினரை இடை நிறுத்தம் செய்ய நேர்ந்துள்ளதாக தலைவர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்குரிய வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அந்த சபையில் மு.கா. சார்பில் அங்கம் வகிக்கின்ற ஒரேயொரு உறுப்பினரான தஜாப்டீனுக்கு கட்சியின் தலைமைத்துவம் பணிப்புரை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் "என் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி நான் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்பேன்" என்று மு.கா. உறுப்பினர் தஜாப்டீன் சபையில் உரையாற்றும்போது உறுதியாக குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இவ்வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையும் மு.கா. உறுப்பினர் தஜாப்டீன் எதிர்த்து வாக்களித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post Top Ad