ஜனாதிபதி மஹிந்த ஜோர்தான் மன்னர் சந்திப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

ஜனாதிபதி மஹிந்த ஜோர்தான் மன்னர் சந்திப்பு


இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று (6) மாலை  ஹசேமயிட் மாளிகையில் அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா இபின் அல் ஹுசைனை சந்தித்தார்.


இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பின்போது ஜனாதிபதியை கெளரவத்துடன் வரவேற்ற மன்னர் ஹுசைன் இருநாட்டை தொடர்புபடுத்தக்கூடிய பல்வேறு துறைகள் தொடர்பாக கலந்துரையாடினார். பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் 2007 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட  வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஒருங்கமைப்பு குழு தொடர்பாக இந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையிடமிருந்து ஜோர்தான் இறக்குமதி செய்யும் தேயிலையின் இறக்குமதி வரிச்சலுகை தொடர்பான கவனத்தில் கொள்ளுமாறு மன்னரிடன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். தற்போது ஜோர்தானுக்கு அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடு இலங்கையாகும். இலங்கை ஜோர்தானுக்கு ஏற்றுமதி செய்யும் உற்பத்திப் பொருட்களின் முழுமையான பெறுமதியில் 80 சதவீதம் தேயிலையிலேயே பெறப்படுகிறது. இலங்கையிடமிருந்து இறக்குமதி செய்யும் தேயிலையை ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஜோர்தான் மீள்ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.இச்சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ்- வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கமலா ரணதுங்க- ரொஷான் ரணசிங்க- ஜோன் அமரதுங்க- ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க- மற்றும் ஜோர்தானுக்கான இலங்கை தூதர் காமினி ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post Top Ad