கிண்ணியா வரவேட்புக் கோபுர நிர்மாண பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, January 28, 2014

கிண்ணியா வரவேட்புக் கோபுர நிர்மாண பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது

(ஜெயினுதீன் அமீர்)

கடந்த 20.01.2014ம் திகதி திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் தலைமயில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம் பெற்றது.


இக்குட்டத்தில் மூதூர், திருகோணமலை, சேருவில,தொகுதி அபிவிருத்தி சம்மந்தமான சில கேல்விகள் கேட்கப்பட்டன அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டதோடு இதைவிட கிண்ணியா வரவேட்புக்கோபுர கட்டுமான பணிகளுக்கான அனுமதியை திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமேவிடம் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் முன்வைத்தார்.

இதன் பிரகாரம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.டி.ஆர்.சில்வாவினால் மதசார்பற்ற விதத்தில் கிண்ணியா வரவேட்புக்கோபுர நிர்மாண பணியை ஆரம்பிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவர் என்ற வகையிலும் மாவட்ட பிரதி அமைச்சர் என்ற வகையிலும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த பாரளுமன்ற தேர்தலில் அதி கூடிய விருப்ப வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளவர் என்ற வகையில் இவ் அனுமதியை வழங்கியுள்ளார்.

No comments:

Post Top Ad