சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை


வவுனியா எட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி எட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் படி கைது செய்யப்பட்ட அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தின் காப்பாளரும் விகாராதிபதியுமான கல்யாணதிஸ்ஸ தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று வவனியா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபரான கல்யாணதிஸ்ஸ தேரரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிபதி இராமக்கமலன் விடுதலை செய்திருந்தார்.

No comments:

Post Top Ad