மூதூர் பீஸ்ஹோம் அமைப்பினால் காணாமல் போனவர்கள் சம்பந்தமான 90 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, January 04, 2014

மூதூர் பீஸ்ஹோம் அமைப்பினால் காணாமல் போனவர்கள் சம்பந்தமான 90 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு (படங்கள் இணைப்பு)மூதூர் பிரதேசத்திலிருந்து காணாமல் போனவர்கள் சம்பந்தமான 90 முறைப்பாடுகளை  மூதூர் பீஸ் ஹோம் அமைப்பானது  வியாழக் கிழமையன்று  (2014.01.02)ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளித்தது.
காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி  ஆணைக்குழுவின்    அனுமதியோடு எஸ்.எச்.அமீர் தலைமையிலான    மூதூர் பீஸ்ஹோம் அமைப்பானது காணாமல் போனவர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை சேகரிக்கும் பணியில் கடந்த இரு வாரங்களாக ஈடுபட்டிருந்தது.


மூதூர் பிரதேசத்திலிருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர் ஆணைக்குழுவிற்கு  முறைப்பாடுகளை செய்வதற்கு ஆர்வம் காட்டாத நிலையிலேயே  பீஸ் ஹோம் அமைப்பானது பொது மக்களுக்கு அது சம்பந்தமாக தெளிவூட்டி முறைப்பாடுகளை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தது.No comments:

Post Top Ad