சவுதி அரேபியா, 7 உறவு நாடுகளுடன் ஆறு வகையான உடன்படிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 02, 2014

சவுதி அரேபியா, 7 உறவு நாடுகளுடன் ஆறு வகையான உடன்படிக்கை

(sfm)

வெளிநாட்டு வேலைவாய்ப்பு சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு சவுதி அரேபியா, 7 உறவு நாடுகளுடன் ஆறு வகையான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட தீர்மானித்துள்ளது.

மனிதவளத்தை ஏற்றுமதி செய்யும் இலங்கை உட்பட்ட நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக சவூதி அரேபியாவின் வெளிவிவகாரம் மற்றும் பிரதி தொழிலமைச்சர் அஹ்மட் எப்ஃ அல் பஹய்ட் தெரிவித்துள்ளார்.

அரப் நியுஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்விலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்று அவர் புதுடில்கிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் மனிதவள மேம்பாடு குறித்து கலந்துரையாடி ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளார்.

மனித ஏற்றுமதியில் பிலிப்பீன்சுக்கு இரண்டாவதாக இந்தியா திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 14 ம் திகதி அளவில் இலங்கையும், சவுதி அரேபிய ராச்சியத்துடன், உடன்படிக்கையில் இணைந்து கொள்ளவுள்ளது.

இதுதவிர, நேபாளம், இந்தோனேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளும் மனிதவள ஏற்றுமதியில் எதிர்காலத்தில் சவுதி அரேபியாவுடன் இணைந்து செயற்படவுள்ளன.

No comments:

Post Top Ad