இலங்கையின் 66 ஆவது சுதந்திர விழா கொண்டாட்டங்கள் இம்முறை கேகாலையில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

இலங்கையின் 66 ஆவது சுதந்திர விழா கொண்டாட்டங்கள் இம்முறை கேகாலையில்

(vi)

உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு ஒன்று கூடுவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 66 ஆவது சுதந்திர விழா கொண்டாட்டங்கள் இம்முறை கேகாலையில் நடைபெற உள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
 
இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தவும் தேசத்தை கட்டியெழுப்பவும் அபிவிருத்தியை எட்டுவதற்கும் இவ்சுதந்திர தினத்தை இம்முறை கேகாலையில் நடாத்துவதாகவும் அன்றைய தினம் தேசிய கொடியை ஏற்றி அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
சுதந்திர வைபவங்கள் குறித்து ஊடகவியலாளர் மாநாடுகள் தகவல் தொடர்பாடல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்
 
பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 66 ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் நாட்டில் சமாதானமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது. இதனால் தான் ஒரு காலத்தில் கொழும்பினை மட்டும் மையமாக கொண்டு நடாத்தப்பட்ட சுதந்திர தின வைபவங்கள் இன்று நம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது.
 
யுத்தத்திற்கு பின்னர் கண்டி, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் சுதந்திரதின கொண்டாட்டங்களை நடாத்திய நாம் இம்முறை கேகாலையில் நடாத்துகின்றோம்.
 
கொழும்பில் மட்டும் சுதந்திர தின கொண்டாட்டங்களை நடாத்தினால் ஏனைய பிரதேசங்களில் உள்ளோருக்கு சுதந்திர கொண்டாட்டங்களில் பங்கு பற்ற முடியாமல் போகின்ற சூழல் நிலவுகின்றது. இதனால் அவர்கள் சுதந்திரதினம் பற்றி அக்கறை அற்றவர்களாகவே உள்ளனர். ஆனால் எல்லா பிரதேசங்களில் இவ்வாறு சுதந்திரதின கொண்டாட்டங்களை வருடா வருடம் கொண்டாடும் போது ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற உணர்வு வெளிப்படுவதோடு எல்லா பிரதேசமும் துரித அபிவிருத்தியினை எட்டிச் கொள்ள இது உதவும். 

No comments:

Post Top Ad